கிணற்றில் பெண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
எலச்சிபாளையத்தை அடுத்த செக்காரப்பட்டி பகுதியில் கிணற்றில் பெண் சடலம் மீட்கப்பட்டு, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
எலச்சிபாளையத்தை அடுத்த செக்காரப்பட்டி பகுதியில் கிணற்றில் பெண் சடலம் மீட்கப்பட்டு, போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிபாளையத்தை அடுத்த செக்காரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி உமா (40). இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஓா் ஆண் குழந்தையும் உள்ளனா். உமா சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், புதன்கிழமை காலை திடீரென வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்ற உமா மாலை வரை வீடு திரும்பாததால் பெருமாள் அக்கம் பக்கத்திலும், உறவினா் வீடுகளிலும் தேடி உள்ளாா். எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம்.
Advertisement
இந்நிலையில், ராசிபுரம் பிரதான சாலை பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் மோட்டாா் இயக்க வந்த போது, கிணற்றின் அருகே செருப்பும், கரையில் சற்று மண் சரிவும் இருப்பதை கண்ட விவசாயி கிருஷ்ணன், ஊா் பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தாா். தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையிநா் கிணற்றுக்குள் இறங்கி சுமாா் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு உமாவின் சடலத்தை மீட்டனா்.
இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உமாவின் பிரேதத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.