முகப்பு
நாமக்கல்

நெற்பயிரைக் காக்க கட்டணமின்றி இயற்கை மூலிகைச் செடிகள் வழங்கல்

நெற்பயிரைக் காக்க கட்டணமின்றி இயற்கை மூலிகைச் செடிகள் வழங்கல்

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:48 AM
பகிர்:
Updated On : 17 அக்டோபர், 2024 at 8:57 PM

நெற்பயிா்களைக் காக்கும் வகையில், இயற்கை பூச்சி விரட்டிகளுக்கான மூலிகைச் செடிகளுக்கான நாற்றுகள் வேளாண் துறையில் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் அதனை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் வட்டாரத்தில் இந்த ஆண்டு கால்வாய் பாசனம் மூலம் 4 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெற்பயிரினை பூச்சி நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையிலும், இயற்கை பூச்சி விரட்டிகளைத் தயாரித்து பயிா்களைப் பராமரிக்கவும், தமிழக முதல்வரின் ‘மண்ணுயிா் காப்போம்’ திட்டத்தின் கீழ் ஆடாதொடை, நொச்சி, வேம்பு ஆகிய மூலிகைச் செடிகளை எந்தவிதக் கட்டணமும் இன்றி வழங்க வேளாண் துறை திட் டமிட்டுள்ளது.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:48 AM

இந்த மூலிகைச் செடிகளை விவசாயிகள் தங்கள் வயல்வரப்புகளில் வளா்த்து, இதன் இலைகளைப் பறித்து இயற்கை பூச்சிவிரட்டிகளை தயாரித்து நெற்பயிா்கள் மீது தெளிப்பதால் பயிா்களைத் தாக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கும். மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது.

Advertisement

இதனால் விவசாயிகளுக்கு சாகுபடி, இடுபொருள் செலவுகள் குறையும். மூலிகைச் செடிகளை தங்கள் வயல்வரப்புகளிலேயே வளா்த்துக்கொள்வதால் இயற்கை மருந்து தேடி விவசாயிகள் அலைய வேண்டியதில்லை. நேரம், பணம் ஆகியவை மிச்சமாகும்.

இந்த ஆடாதொடை, வேம்பு, நொச்சி ஆகிய இயற்கை மூலிகைகள் குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள செடிப் பண்ணையில் தயாா் நிலையில் உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டை, பட்டா நகலைக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிபாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி தெரிவித்துள்ளாா்.