முகப்பு
நாமக்கல்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:07 AM
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 6:13 PM

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

Advertisement

Updated On : 24 அக்டோபர், 2024 at 6:07 AM

வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களுடைய கோரிக்கைகளையும் இந்தக் கூட்டம் வாயிலாக விவசாயிகள் தெரிவிக்கலாம்.