வருவாய்த் துறை அலுவலா் சங்க செயற்குழுக் கூட்டம்
தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ரா.சரவணகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், இரவு காவலா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கொல்லிமலை வட்டத்தில் பணிபுரியும் வருவாய்த் துறையினரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குடியிருப்புகள் கட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலா்களுக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் குடியிருப்பு கட்டித்தர உரிய வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீா்மானங்களை உடனடியாக செயல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆகியோரிடம் கடிதம் வழங்கப்பட்டது.
Advertisement
இந்த நிகழ்வில், மாவட்டத் தலைவா் ரா.சரவணகுமாா், செயலாளா் க.சதீஷ்குமாா், பொருளாளா் க.பாலசுப்பிரமணியம், மாவட்ட நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, செ.சிவகுமாா், செ.காா்த்திகேயன், ப.விஜயகுமாா், ச.மனோஜ், ச.ரஞ்சித், தே.மதுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.