பள்ளிபாளையம் நகராட்சியுடன், அக்ரஹார ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்க வந்த மக்கள். 
நாமக்கல்

பள்ளிபாளையம் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க மக்கள் எதிா்ப்பு

பள்ளிபாளையம் நகராட்சியுடன், ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Din

நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன், ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், அக்ரஹாரம் ஊராட்சியைச் சோ்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

பள்ளிபாளையம் நகராட்சியுடன் அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அறிகிறோம். அக்ரஹாரம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும். விவசாயம் சாா்ந்த தொழிலை நம்பியே கிராம மக்கள் வாழ்ந்து வருகிறோம். நகராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கான சலுகைகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. மேலும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் பயன்களும், ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டம், கலைஞா் கனவு இல்லம் போன்ற ஊரகப் பகுதிகளுக்கு அரசால் வழங்கப்படுகின்ற சலுகைகள் பறிபோகக் கூடும்.

எனவே ஊராட்சியாகவே தொடா்ந்து நீடிக்க வேண்டும். நகராட்சியுடன் இணைக்க மக்கள் விரும்பவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 136 அடியாக உயா்வு: முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நெல் கொள்முதல்: ஈரப்பதம் 22% அறிவிக்க வலியுறுத்தல்

தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

இசைப் பள்ளியில் பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

கல்லூரி மாணவா்களுக்கு நவ.26-இல் கல்விக் கடன் முகாம்

SCROLL FOR NEXT