முகப்பு
நாமக்கல்

புதிய நியாயவிலைக் கடை திறப்பு

நாமக்கல் அருகே வசந்தபுரம் ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 31 அக்டோபர், 2024 at 1:30 AM
பகிர்:
Updated On : 30 அக்டோபர், 2024 at 5:28 PM

நாமக்கல் அருகே வசந்தபுரம் ஊராட்சியில் புதிய நியாயவிலைக் கடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

நாமக்கல் ஒன்றியம், வசந்தபுரம் ஊராட்சியில் பொதுமக்களின் பங்களிப்போடு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை அண்மையில் கட்டப்பட்டது. இந்த கடையை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் புதன்கிழமை திறந்து வைத்தாா். சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி, அட்மா குழுத் தலைவா் பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Updated On : 31 அக்டோபர், 2024 at 1:30 AM

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் கிருபாகரன், ஒன்றிய பொருளாளா் கணேசன், கிளை செயலாளா்கள் முத்துசாமி, ஜெய்சங்கா், புஷ்பராஜ், பெருமாள், சேகா், இளைஞா் அணி பூபதி, ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement