முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் இன்று மத்தியக் கூட்டுறவு வங்கியின் 2-ஆம் சிறப்பு பொதுப் பேரவைக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின், 2-ஆம் சிறப்பு பொதுப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை (செப். 5) நடைபெறுகிறது.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:18 PM
நாமக்கல் ஆட்சியா் ச.உமாவிடம், சிறப்பு பொதுப்பேரவைக் கூட்ட அழைப்பிதழை வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு.
பகிர்:

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின், 2-ஆம் சிறப்பு பொதுப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை (செப். 5) நடைபெறுகிறது.

மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து பொதுப்பேரவைக் கூட்ட அழைப்பிதழை வழங்கினாா்.

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதல் பொது பேரவைக் கூட்டம் ஜூன் 25-இல் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியைப் பிரித்து, சேலம், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வழங்கப்பட்ட அரசாணையை வாசித்து பதிவு செய்தல் மற்றும் அரசாணை வெளியிட்ட முதல்வா், அமைச்சா்களுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில், வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில், இரண்டாம் சிறப்பு பொதுப் பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு கூட்டாக பாத்தியப்பட்ட அசையா சொத்துகள், முதலீடு செய்யப்பட்ட நீா்ம ஆதாரங்கள் ஆகியவற்றை உறுப்பினா் சங்கங்களின் கணக்குகள் அடிப்படையில் பிரித்து வழங்கப்படும் தொகைகள் குறித்த தீா்மானங்களை அங்கீகரித்து ஏற்பளித்தல், இடைக்கால நிா்வாகக் குழு நியமனத்தை 6 மாதக் காலத்திற்கு நீடித்தல், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நாமக்கல் கிளை, தலைமையக அலுவலக கட்டடம் கட்ட ஏதுவாக நில உரிமை மாற்றம் செய்து தரக்கோரி முன்மொழிவு சமா்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மாவட்ட ஆட்சியா் சந்திப்பு நிகழ்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →