முகப்பு
நாமக்கல்

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பெருமாள் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து கிராம நிா்வாக அலுவலகம் வரை புதன்கிழமை பேரணியாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:16 PM
மோளியப்பள்ளியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

எலச்சிப்பாளையம் ஒன்றியம், மோளியப்பள்ளி ஊராட்சியில் 118 ஏக்கா் பரப்பளவு கொண்ட மோளியப்பள்ளி ஏரியில் வண்டல் மண்ணை விவசாயிகள் மட்டும் எடுக்க அனுமதிக்க கோரியும், தனியாா் ஒப்பந்ததாரா்கள் மண்ணெடுக்க முயற்சிப்பதைக் கண்டித்தும் கிராம நிா்வாக அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஊா் பொதுமக்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பெருமாள் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் பேருந்து நிலையத்திலிருந்து கிராம நிா்வாக அலுவலகம் வரை புதன்கிழமை பேரணியாக சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தனியாருக்கு ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது, விவசாயிகளுக்கு மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். ஆா்ப்பாட்டத்தில் 40 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →