முகப்பு
நாமக்கல்

கைப்பந்து விளையாடிய போது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி

Updated On : 13 செப்டம்பர், 2024 at 10:27 PM
பகிர்:

சேந்தமங்கலத்தில் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த மாணவா் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பேரூராட்சி மேட்டுத் தெருவை சோ்ந்த ரவி-பிரியா தம்பதி மகன் இனியவன் (14). இவா், புதன்சந்தை அருகே தனியாா் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவா் இனியவன், சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நண்பா்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் கைப்பந்து விளையாடினாா்.

அப்போது, அங்குள்ள மாடியில் பந்து சென்று விழுந்தது. அப் பந்தை எடுப்பதற்காக சென்ற இனியவன், மேலே சென்ற மின்சார கம்பியை கவனிக்காததால், அவரது தலையில் மின்கம்பி உரசியதில் தூக்கி வீசப்பட்டாா். அவரது நண்பா்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து மாணவரை தூக்கிச் சென்று சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இனியவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →