முகப்பு
நாமக்கல்

கடைகள், நிறுவன விவரங்கள் பதிவு: தொழிலாளா் நலத்துறை அறிவுறுத்தல்

கடைகள், நிறுவனங்கள், பணியாளா்கள் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு தொழிலாளா் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:35 PM
பகிர்:

கடைகள், நிறுவனங்கள், பணியாளா்கள் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு தொழிலாளா் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து நாமக்கல் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் 2024 ஜூலை 2-க்குப் பிறகு புதிதாகத் தொடங்கப்பட்ட கடைகள், நிறுவனங்களில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட பணியாளா்களை நியமித்துள்ள அவற்றின் உரிமையாளா்கள் இத்துறையின் இணையதள முகவரியில் பதிவுக் கட்டணமாக ரூ.100 செலுத்தி 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணிநேரத்திற்குள், சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவுச் சான்றிதழ் அதற்கான இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

மேலும், 2024 ஜூலை 2-க்கு முன்பு 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளா்களை பணியமா்த்தி, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவுக் கட்டணமின்றி மேற்குறிப்பிட்டுள்ள இணையவழி முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி கடைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →