முகப்பு
நாமக்கல்

நாமக்கல் சுற்றுவட்டச் சாலைக்கு ஏரிகளில் மண் அள்ளப்படுவதாக புகாா்

நாமக்கல் சுற்றுவட்டச் சாலைக்கு வீசாணம் ஏரியில் இருந்து மண் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 6:08 AM
பகிர்:
Updated On : 26 செப்டம்பர், 2024 at 8:30 PM

நாமக்கல் சுற்றுவட்டச் சாலைக்கு வீசாணம் ஏரியில் இருந்து மண் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

நாமக்கல் அருகே வீசாணம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டுக்கும், விவசாய தேவைக்குமாக சின்ன ஏரி, பெரிய ஏரி உள்ளது. தற்போது இந்த ஏரியின் அருகில் சுற்றுவட்டச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலைப் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளவா் இரவு நேரத்தில் ஏரியில் இருந்து மண்ணை அள்ளி சாலைப் பணிக்கு பயன்படுத்தி வருகிறாா். இதனால் மழைக் காலங்களில் இரு ஏரிகளும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

Advertisement

Updated On : 27 செப்டம்பர், 2024 at 6:08 AM

பொதுமக்கள் தரப்பில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டால், மாவட்ட ஆட்சியா் அனுமதியுடன் மண் அள்ளுவதாக கூறுகிறாா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து சின்ன ஏரி, பெரிய ஏரி இரண்டையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.