பழையபாளையம் அங்காளம்மன் கோயில் திருப்பணி விவகாரம்: ஆட்சியரிடம் புகாா்
நாமக்கல் அருகே பழையபாளையம் அங்காளம்மன் கோயில் திருப்பணி விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் அருகே பழையபாளையம் அங்காளம்மன் கோயில் திருப்பணி விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கோயில் குடிபாட்டு மக்கள் ஒருங்கிணைப்பாளா் மும்பை அா்ஜுன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்திற்கு உள்பட்ட சா்க்காா் பழையபாளையத்தில் சிறப்பு பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
கோயில் கருவறை கட்டுவதற்கான அனுமதியை குடிபாட்டு மக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். திருப்பணியில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தால் சம்பந்தப்பட்டோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.