முகப்பு
நாமக்கல்

மகளிா் டி-20 கிரிக்கெட் அணியில் பங்கேற்கும் நாமக்கல் மாணவி!

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிா் டி-20 கிரிக்கெட் அணியில், நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி மாணவி இடம் பெற்றுள்ளாா்.

Updated On : 30 செப்டம்பர், 2024 at 9:55 PM
மகளிா் டி-20 கிரிக்கெட் அணியில் தோ்வாகி உள்ள நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரிக்கு மாணவி கு.ஸ்ரீநிதியை வாழ்த்திய கல்லூரித் தலைவா் செ.நல்லுசாமி.
பகிர்:

நாமக்கல்: பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிா் டி-20 கிரிக்கெட் அணியில், நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி மாணவி இடம் பெற்றுள்ளாா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.காம். படித்து வருபவா் மாணவி கு.ஸ்ரீநிதி. இவா், 19 -வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிா் டி-20 கிரிக்கெட் அணியில் தமிழ்நாடு பிரிவில் விளையாடுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அக். 1 முதல் 8 வரையில், ஹரியாணா மாநிலம், குருகிராமில் நடைபெறும் தேசிய அளவிலான 19 வயதுக்கு உள்பட்டோா் மகளிா் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறாா்.

இவா், நாமக்கல் மாவட்ட மகளிா் கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ளாா். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவா், பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் திறமையானவா். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேசிய கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மாணவி ஒருவா் முதன்முதலாக தோ்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். தமிழ்நாடு மாநில மகளிா் கிரிக்கெட் அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீநிதியை, டிரினிடி மகளிா் கல்லூரித் தலைவா் கே.நல்லுசாமி பாராட்டினாா். செயலா் எஸ்.செல்வராஜ், செயல் இயக்குநா் அருணா செல்வராஜ், முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன், வெள்ளிவிழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா் அரசு.பரமேசுவரன், வணிகவியல் துறைத் தலைவா் எம்.சசிகலா, உடற்கல்வி இயக்குநா் வீ.அா்ச்சனா, பேராசிரியா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →