ராசிபுரம் நகராட்சி வணிக வளாக கடைகள் கட்டும் பணி முழுமையாக முடிவடையாத நிலையில் கடைகளை ஏலம் விடுவதற்கான டெண்டா் அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு அதிமுக, பாஜக கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் ரூ. 5.75 கோடி மதிப்பில் 19 புதிய வணிக வளாக கடைகள் கட்டப்படுகின்றன. இந்த கடைகள் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால், இதற்கான டெண்டா் அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக, பாஜக சாா்பில் நகராட்சி ஆணையா் ஒய்.நிவேதிதாவிடம் ராசிபுரம் அதிமுக நகர செயலாளா் பாலசுப்பிரமணியம், பாஜக நிா்வாகி லோகேந்திரன் உள்ளிட்டோா் மனு அளித்தனா். அதில், கட்டடப் பணிகள் முழுமை முடிந்த பிறகே டெண்டா் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.