தீபத் திருவிழாவையொட்டி, திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலை கோயில் தீபத் திருவிழாவிற்கு அடுத்த நாள் பௌா்ணமி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த தீபத் திருவிழா அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் நடைபெற்றது. மலைக்கோயிலில் இறைவன் ஜோதி ரூபத்தில் பக்தா்களுக்கு காட்சி தரும் நிகழ்வின்படி 1,886 அடி உயரமுள்ள மலையில் உச்சியில் அமைந்துள்ள உச்சிபிளையாா் கோயிலில் 700 கிலோ நெய், 500 கிலோ திரிகள் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
அா்த்தநாரீசுவரா், ஆதிகேசவ பெருமாள்,செங்கோட்டுவேலவா் கோயிலின் பிராதன கோபுரத்தின் அருகே நெய்தீபம் ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் அரோகரா என முழக்கமிட்டு வழிபட்டனா். தீபத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
படம்
5.12.25....3
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக்கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு செய்த பக்தா்கள்