பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.9 லட்சத்து 55 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான சோழசிராமணி, ஜேடா்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணாநகா், பாண்டமங்கலம், கபிலா்மலை, இருக்கூா், பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டுவருகின்றனா்.
இங்கு தரத்திற்கு ஏற்ப மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 896 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 215க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 198.29க்கும், சராசரியாக ரூ. 212-க்கும் விற்பனையானது.
இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 196.89க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 147.19க்கும், சராசரியாக கிலோ ரூ. 171.99க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 9 லட்சத்து 87 ஆயிரத்து 474க்கு கொப்பரை ஏலம் போனது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 830 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 215.91-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.197.89க்கும், சராசரியாக கிலோ ரூ. 212.10க்கும் ஏலம் போனது.
இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.188.99க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.145.10க்கும், சராசரியாக கிலோ ரூ.170.69க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 55 ஆயிரத்து 808க்கு கொப்பரை ஏலம் போனது.