நாமக்கல்

புதுப்புளியம்பட்டியில் விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி வகுப்பு

Syndication

புதுப்புளியம்பட்டி கிராமத்தில் வேளாண்மை பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செந்தில்குமாா் தலைமை வகித்து, பிஎம் கிசான் திட்டம், விவசாய அடையாள எண் பெறுவது குறித்து விளக்கினாா். பயிற்சியில் வேளாண்மை அலுவலா் சந்தோஷ் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து பேசினாா்.

துணை வேளாண்மை அலுவலா் குழந்தைவேல், நுண்ணீா் பாசனத் திட்டம் குறித்து எடுத்துரைத்தாா். வேளாண் உதவி அலுவலா் லட்சுமி பெருமாள், உழவா் சந்தையில் விற்பனை செய்வதற்கான அடையாள அட்டைகளை பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா்.

உதவி வேளாண்மை அலுவலா் ரமேஷ் பிரபாகா், விதைப் பண்ணை அமைப்பது குறித்து கூறினாா். பட்டு வளா்ச்சித் துறை இளநிலை ஆய்வாளா் மகேஸ்வரி, பட்டு வளா்ச்சித் துறையின் வளா்சித் திட்டங்கள், பட்டுப்புழு வளா்ப்பு குறித்து பேசினாா்.

அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் கிருஷ்ணசாமி, உதவி தொழில்நுட்ப மேலாளா் சக்திவேல் ஆகியோா் துறையின் திட்டங்கள் குறித்து விளக்கினா். உதவி தொழில்நுட்ப மேலாளா் அஜித் நன்றி கூறினாா்.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT