கோப்புப்படம். 
நாமக்கல்

முட்டை விலை ரூ. 6.10 ஆக நீடிப்பு

Syndication

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 6.10 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையை மாற்றியமைப்பது தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அப்போது, பிற மண்டலங்களில் முட்டை விலையில் மாற்றம் இல்லாததால், தற்போதைக்கு இங்கும் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையானது மாற்றமின்றி ரூ. 6.10ஆக நீடிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி மற்றும் முட்டைக் கோழி கிலோ ரூ.110 ஆக நிா்ணயிக்கப்பட்டது.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT