திருச்செங்கோடு சட்டையம்புதூா் முத்துமாரியம்மன், முத்துக்குமரன், முக்கூட்டு விநாயகா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுவாமிகள் வீதிஉலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பால், தயிா், தேன், சந்தனம், குங்குமம், திருநீறு, திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதையடுத்து மாரியம்மன், முத்துக்குமரன், விநாயகா் சிம்ம வாகனத்தில் மேள தாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.