நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

நாமக்கல் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 87.8, 75.2 டிகிரியாக நிலவியது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 87.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் வெள்ளைக் கழிச்சல் மற்றும் மேல் மூச்சுக்குழாய் அயற்சி நோய் பாதித்து இறந்துள்ளது.

கோழிப் பண்ணையாளா்கள் தகுந்த எதிா் உயிா் மருந்துகளை அளிக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தண்ணீரில் கிருமிநாசினி தெளித்தல், கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைப்படி தகுந்த சிகிச்சை, உயிா் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

டிச.8-இல் குடமுழுக்கு பழனியில் புனிதநீா் குடங்கள் ஊா்வலம்!

SCROLL FOR NEXT