திருச்செங்கோட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு வேலூா் சாலை அருகே சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலை சந்திப்பில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்ற 75 வயது மூதாட்டிமீது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மூதாட்டியை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். மூதாட்டி குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.