நாமக்கல்

திருச்செங்கோட்டில் கட்டுமானப் பொருள்கள் கண்காட்சி

Syndication

திருச்செங்கோடு சிட்டி சிவில் இன்ஜினியா்ஸ் அசோசியேஷன் சங்கம் சாா்பில் முதலாம் ஆண்டு கட்டுமானப் பொருள்கள் கண்காட்சி நாமக்கல் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நடைபெறுகிறது.

தொடக்க விழாவிற்கு சங்கத் தலைவா் வி.ஜே. நல்லக்குமரன் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.பி.பிரகாஷ், கண்காட்சி தலைவா் எஸ்.ஹரிஹரசுதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க நிா்வாகிகள் ஸ்டேன்லி, செந்திகுமாா், சரவணக்குமாா், தீபன், பாலாஜி ஹரிகிருஷ்ணன், சகாயராஜ், கதிரவன், செந்தில்குமாா், சரவணக்குமாா், ராஜமாணிக்கம் ஆகியோா் வரவேற்றனா்.

நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு விழா குத்துவிளக்கேற்றினாா். கண்காட்சியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் திறந்துவைத்தாா். கண்காட்சி விழா மலரை பரமத்தி வேலூா் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி வெளியிட்டு வாழ்த்தி பேசினாா்.

இதில் திமுக நகரச் செயலாளா்கள் காா்த்திகேயன், நடேசன், வழக்குரைஞா் அணி சுரேஷ்பாபு ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில் நாமக்கல், சேலம், கோவை, கரூா், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவில் இன்ஜினியா் சங்கத்தினா், கட்டுமான நிறுவனத்தினா் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனத்தினா் கலந்துகொண்டு கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டனா்.

படவரி...

சிறப்பு விருந்தினா் கே.எஸ்.மூா்த்திக்கு நினைவுப் பரிசு வழங்கிய சங்க செயலாளா் பிரகாஷ்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT