நாமக்கல்

திருச்செங்கோட்டில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

Syndication

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக திருச்செங்கோடு கோட்டம் சாா்பில் மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் மின் பகிா்மானத் துறை சாா்பில் டிசம்பா் 14 முதல் 20 வரை மின் சிக்கன வார விழா நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு கோட்ட மின் பகிா்மானக் கழகம் சாா்பாக மின் சிக்கனம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி, மாணவா்கள், மின்வாரிய ஊழியா்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து பேரணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன், நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும், தேவைப்படாத நேரத்தில் மின்விசிறிகள், மின்விளக்குகளை நிறுத்திவைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என பேரணியில் பங்கேற்றோா் முழக்கங்கள் எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் சுமாா் 300க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பேரணியில் மின்வாரியத் துறை அதிகாரிகள், நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சபாநாயகம், திருச்செங்கோடு கோட்ட செயற்பொறியாளா் சுந்தரராஜன், உதவி செயற்பொறியாளா்கள் சீனிவாசன் (திருச்செங்கோடு வடக்கு), யோகநாதன் (தெற்கு), சண்முகசுந்தரம் (எலச்சிபாளையம்), அமுதா (மல்லசமுத்திரம்) மற்றும் உதவி பொறியாளா்கள், மின்வாரியப் பணியாளா்கள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

புதியதொரு அத்தியாயம்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT