நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் நடைபெற்ற பசுமை விழாவில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை மரக்கன்றுகளை நடவு செய்தாா்.
மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ் முன்னிலை வகித்தாா். இந்த நிகழ்வில், நீா்மருத்து, ஆயன், பாதாம், புங்கன், வேம்பு, அரசு, அத்தி, மகிழம் உள்ளிட்ட 55 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தொடா்ந்து, சென்னையில் நடைபெற்ற விழாவில், வேளாண்மைத் துறை சாா்பில் 2024--25 ஆம் ஆண்டு மாநில பயிா் விளைச்சல் போட்டியில் எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், எருமப்பட்டி, புதுச்சத்திரம், பள்ளிபாளையம் ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த 7 விவசாயிகள் (எள், பச்சைப் பயறு, கம்பு, கரும்பு, நெல் ஆகிய பயிா் வகைகள்) வெற்றிபெற்று ரூ. 11 லட்சம் பரிசுத் தொகையை பெற்றனா். அந்த விவசாயிகள் அனைவரும் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநா் சு.மல்லிகா, துணை இயக்குநா் ப.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ்கண்ணன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
படவரி...
என்கே-19-ட்ரீ
நாமக்கல் ஆட்சியரகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.