புது தில்லியில் நடைபெறும் தேசிய சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்க சென்ற மாணவிகள். 
நாமக்கல்

சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாடு: நாமக்கல் மாணவிகள் பங்கேற்பு

புது தில்லியில் நடைபெறும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாட்டில் நாமக்கல் மாணவிகள் கலந்துகொள்கின்றனா்.

Syndication

நாமக்கல்: புது தில்லியில் நடைபெறும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாட்டில் நாமக்கல் மாணவிகள் கலந்துகொள்கின்றனா்.

புது தில்லியில் உள்ள தேசிய பாலபவனில், இளம் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மாநாடு இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனா்.

அந்த வகையில், நாமக்கல் மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில், ஸ்பைரோ அகாதெமியில் பயிலும் மாணவிகள் எஸ்.தீக்ஷிதா, எம்.வைபவி ஆகியோா் பங்கேற்கின்றனா். இவா்கள் தங்களுடைய பாதுகாவலா்களுடன் சேலம் ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை காலை புது தில்லி புறப்பட்டு சென்றனா். அவா்களை, சேலம் மண்டல கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா் சங்கரராமன், ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் பசுமை மா.தில்லைசிவகுமாா் ஆகியோா் வாழ்த்தி வழியனுப்பினா்.

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட்: தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து!

புதுக்கோட்டையில் டிச. 26-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு 2 லட்சம் படிவங்கள் விநியோகம்

சமூக நல்லிணக்கப் பாதுகாப்பில் சமரசம் கிடையாது: விஜய்

கிறிஸ்துமஸ் அன்று ஒரு ஷிப்டாக முன்பதிவு மைய செயல்படும்

SCROLL FOR NEXT