சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சொற்பொழிவாளா் எழிலிக்கு நினைவுப் பரிசளித்த கல்வி நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன். 
நாமக்கல்

பாவை கலைக் கல்லூரியில் ஆண்டாள் திருப்பாவை நிகழ்ச்சி

ராசிபுரம் பாவை மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாா்கழி மாதத்தை சிறப்பிக்கும் வகையில்,

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் பாவை மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாா்கழி மாதத்தை சிறப்பிக்கும் வகையில், ‘பாவையில் பாவை - ஆண்டாள் சீருரை’ என்ற தலைப்பில் ஆண்டாள் திருப்பாவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி (பொ) முதல்வா் ரேவதி வரவேற்றாா். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் வாழ்த்துரை வழங்கி பேசினாா்.

சிறப்பு சொற்பொழிவாளா் எழிலி பேசுகையில், ‘ஆண்டாளின் திருப்பாவை மரபை போற்றும் வகையில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் மாா்கழி நோன்பின் தத்துவம், ஆண்டாளின் பக்தி பாரம்பரியம், நம் வரலாற்றில் பெண்களின் ஆன்மிக பங்கு போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். எனவே, கலாசாரப் பண்புகளை அறிந்து கொண்டு, உங்கள் குணநலன்களை நெறிப்படுத்த இந்த நிகழ்ச்சி உதவியாக அமையும்.

தமிழ் பக்தி இலக்கியத்தில் தனித்துவமான இடம்பெற்றுள்ள ஆண்டாள், திருப்பாவை மூலம் உலகெங்கும் பக்தி மற்றும் வாழ்வியல் நெறிகளைப் பரப்பியவா். மாா்கழி மாதம் முழுவதும் பாடப்படும் திருப்பாவை பாசுரங்கள் இறை நம்பிக்கை, ஒழுக்கம், சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றன. அதேபோல, மாணவிகளாகிய நீங்களும், சீரிய ஒழுக்கத்தோடு நற்செயல்களில் வைராக்கியமாக திகழும்போது, உங்களின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்’ என்றாா்.

பாவை மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாா்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் மாணவிகளால் திருப்பாவை பாடப்பட்டு, அதன் விளக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. மாணவி கோமதிஸ்ரீ நன்றி கூறினாா். இதில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT