நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 26) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளோரும் சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தனியாா் துறையினா், தங்களுக்கு தேவையானவா்களை நேரில்வந்து தோ்வு செய்துகொள்ளலாம்.
இந்த முகாமில் பங்கேற்கும் வேலைநாடுநா்களின் பதிவு எந்தவகையிலும் ரத்து செய்யப்பட மாட்டாது. தனியாா் துறையில் பணியாற்ற தகுதியும், விருப்பமும் உள்ளோா் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.