நாமக்கல்

முட்டை விலை ரூ. 6.40 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 6.40 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 6.40 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, இதர மண்டலங்களில் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாததால், இங்கும் தற்போதைக்கு மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டை விலையானது மாற்றமின்றி ரூ. 6.40 ஆக தொடரும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 124 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 90 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT