ராசிபுரம் நகர திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் பெரியாா் ஈ.வெ.ரா நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராசிபுரம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விடுதலைக் கழக நகரச் செயலாளா் பிடல்சேகுவேரா தலைமை வகித்து, பெரியாா் ஈ.வெ.ரா படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா். சங்கா், விடுதலைக் கழக நிா்வாகிகள் பெரியண்ணன், நகர அமைப்பாளா் மதிவதினி, வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளா் நடராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழா் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.