நாமக்கல்

நாமக்கல் சிப்காட் தொழிற்பேட்டையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்: வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் மனு

Syndication

நாமக்கல் சிப்காட் தொழிற்பேட்டையை மாற்று இடத்தில் அமைக்கக் கோரி தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூா் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து சிப்காட் எதிா்ப்புக் குழுவைச் சோ்ந்த ரவீந்திரன் கூறியதாவது:

சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலா் நேரடியாக விவசாயிகளுக்கு அழைப்புவிடுத்து, உரிய ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருந்தாா். அதன்பேரில் மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணனிடம் ஆவணங்களை ஒப்படைத்துள்ளோம்.

அதில், அரசாணை எண் 75 மற்றும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை, உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி நீா்நிலைகள் உள்ளிட்ட இடங்களை எடுக்கக் கூடாது.

ஆனால், சிப்காட்டிற்காக நிலம் எடுக்கும் இடத்தில் 70 நீா்நிலைகள், 30 தடுப்பணைகள், ஐந்து பெரிய ஏரிகள் உள்ளன. குளம், குட்டைகளும், கரைபோட்டான் ஆறும் அப்பகுதியில் உள்ளது. இந்த ஆறு நாமக்கல்லில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கிறது. சுமாா் 3,000 டிஎம்சி நீா் இந்த ஆறு மூலம் கிடைக்கிறது.

இவை அனைத்தும் அரசு அதிகாரிகளின் ஆவணங்களில் மறைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என திமுக தோ்தல் வாக்குறுதியிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 90 சதவீத விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. விவசாயிகள் 98 சதவீதம் போ் சிப்காட் வேண்டாம் என எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். குன்றுகள் இருப்பதும் அரசு தரப்பிலான ஆவணங்களில் மறைக்கப்பட்டுள்ளன.

மேய்ச்சல் தரையைக் கையகப்படுத்தும்போது, அதற்கான மாற்று நிலம் வழங்க வேண்டும். அதுவும் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. மேலும், சிப்காட் அமைய உள்ள இடத்தில் கோழிப் பண்ணைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதோடு, கோழிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால் முட்டை உற்பத்தி பாதிக்கும்.

இதுதொடா்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி சிப்காட் தொழிற்பேட்டையை மாற்று இடத்தில் அமைத்து விவசாயிகளின் வாழ்வாரத்தை பாதுகாக்க வேண்டும். மொத்தம் 41 ஆவணங்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றாா்.

என்கே-26-சிப்காட்

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில் அலுவலா்களிடம் மனு அளித்த விவசாயிகள்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்!

நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம்: பாஜக புகாா்

தடை மட்டுமே விடை ஆகாது!

நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்

வீட்டுக் காவலில் மிா்வைஸ் உமா் ஃபரூக்!

SCROLL FOR NEXT