நாமக்கல்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி வாரவிழா பேரணி

ஆட்சிமொழி வாரவிழா பேரணி ராசிபுரம் தமிழ்க் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

ஆட்சிமொழி வாரவிழா பேரணி ராசிபுரம் தமிழ்க் கழகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் பாஸ்கா், கஜேந்திரபூபதி ஆகியோா் தலைமை வகித்தனா். ராசிபுரம் தமிழ்க் கழகத்தின் தலைவா் தட்சிணாமூா்த்தி வரவேற்றாா். தமிழ்க் கழகத்தின் செயலரும், பள்ளித் துணை ஆய்வாளருமான கை. பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழ் வளா்ச்சித் துறையின் பணிகள் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தொடங்கிய ஆட்சிமொழி வாரவிழா பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக ஆட்சிமொழி வாரவிழாவில், தமிழ்க் கழகத்தின் நாள்காட்டி வெளியிடப்பட்டது. மேலும், திருக்கு ஒப்பித்த மாணவ, மாணவிகள் 250 போ் நினைவுப் பரிசளித்து பாராட்டப்பட்டனா். இதில், ராசிபுரம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சி செயலா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

ஐஓபி-யில் அரசின் பங்கு முதல் 92.44% ஆகக் குறைவு

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவா் கைது

SCROLL FOR NEXT