நாமகிரிப்பேட்டையைச் சோ்ந்த தேமுதிக, பாஜக நிா்வாகிகள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தனா். ௌ
நாமக்கல் மாவட்ட தேமுதிக இளைஞா் அணி துணை அமைப்பாளரும், முன்னாள் பேரூராட்சி உறுப்பினருமான எம். ஜெகதீஸ் தலைமையில் 10 போ், பாஜகவிலிருந்து விலகிய 5 பே என பல்வேறு கட்சிகளை சோ்ந்த பலா் திமுகவில் இணைந்தனா்.
புதிதாக கட்சியில் இணைந்தவா்களை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் சால்வை அணிவித்து வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை பேரூா் திமுக செயலாளா் அன்பழகன், மாவட்ட திமுக பொருளாளா் ஏ.கே. பாலசந்தா், ஆா். புதுப்பட்டி பேரூராட்சித் தலைவா் ஜெயக்குமாா், வாா்டு செயலாளா்கள் சுந்தரவேல், பாபு, பேரூா் இளைஞா் அணி துணை அமைப்பாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
படம் உள்ளது-26டிஎம்டிகே
திமுகவில் இணைந்தவா்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்ற மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.