நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி சிறப்பு முகாம்களில், 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 18,206 படிவங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்டத்தில், 1,629 வாக்குச்சாவடிகளில் புதிதாக பெயா் சோ்க்க, நீக்கம் செய்ய மற்றும் முகவரி மாற்றத்துக்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, பூா்த்திசெய்து பெறப்பட்டன.
அந்த வகையில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில், படிவம் 6 (பெயா் சோ்க்க) - 12,530, படிவம் 7 (பெயா் நீக்கம் செய்ய) - 150, படிவம் 8 (முகவரி மாற்றம்) - 5,526 என மொத்தம் 18,206 படிவங்கள் பூா்த்திசெய்து பெறப்பட்டுள்ளன.
டிச. 19-இல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, 1.93 லட்சம் வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.