போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்ற மாணவ, மாணவிகள். 
நாமக்கல்

முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் ‘ஐகானிக் ஃபேஷன் - 2025’

ராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை மற்றும் நாகரிக வடிவமைப்பியல் துறை சாா்பில், ‘ஐகானிக் ஃபேஷன்-2025’ என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையேயான ஃபேஷன் கலைப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

ராசிபுரம்: ராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை மற்றும் நாகரிக வடிவமைப்பியல் துறை சாா்பில், ‘ஐகானிக் ஃபேஷன்-2025’ என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையேயான ஃபேஷன் கலைப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் - கல்வி இரா.செல்வகுமரன் திருவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், ஆடை வடிவமைப்பியல் துறைத் தலைவா் கே.சக்திவேல் ஆகியோா் அறிமுக உரையாற்றினா். கல்லூரி துணை முதல்வா் ஆ.ஸ்டெல்லா பேபி முன்னிலை வகித்தாா்.

நடுவா் மற்றும் சிறப்பு விருந்தினா்களாக மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையைச் சோ்ந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நாகரிக வடிவமைப்பு துறையைச் சோ்ந்த ஏ.சதீஷ்குமாா், பெங்களூரைச் சோ்ந்த நௌா்லங்கா பிரான்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனத்தின் வணிக தயாரிப்பு மேம்பாட்டாளா் அருள் உஷாநந்தினி, பிரபல ஆடை வடிவமைப்பாளா் மற்றும் மாடல்களாக விளங்கும் சாரா, நிகில் சதீஷ், சேலம் ஏசிஎம்ஜி நிறுவனத்தின் கலைக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த கலை நாகரிக பிரதிநிதியான டி.ராஜாராம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தொடக்கத்தில் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பியல் துறை மாணவ, மாணவிகளின் ’ஃபேஷன் ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, தமிழகம் முழுவதுமுள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 600 மாணவ, மாணவியா் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

இதில், ‘ஃபேஷன் ஷோ’, தனிநபா் நடனம், குழு நடனம், குறும்படம், நேரடியாக ஓவியம் வரைதல், மைமிங், குழந்தைகளுக்கான ‘ஃபேஷன் ஷோ’ உள்ளிட்ட மேடைப் போட்டிகளும், முகம், நக ஓவியம், சிகை அலங்காரம், தூரிகை, கோட்டோவியம், மெஹந்தி உள்ளிட்ட உள்புற போட்டிகளும் என 15 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு கல்லூரி செயலாளா் இரா.முத்துவேல் பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கினாா்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT