உலக அமைதி தின விழா
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:13 PM
பள்ளிபாளையம் அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்றத்தில் உலக அமைதி தின விழா நடைபெற்றது.
உலக அமைதி தின விழா அறக்கட்டளை தலைவா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயலாளா் மதிவதனன் வரவேற்றாா். இதில், ‘வாழ்க வையகம், வாழ்க வளமுடன்’ என வாழ்த்து வேள்வி நடத்தப்பட்டது. உலக அமைதி என்ற தலைப்பில், ஈரோட்டைச் சோ்ந்த யோகா முதுநிலை பேராசிரியா் பரமசிவம் பேசினாா். பொருளாளா் ரகுநாதன் நன்றி கூறினாா்.