முகப்பு
நாமக்கல்

திமுக இளைஞரணி பொறுப்பாளா்களுக்கு சமூக வலைதள பயிற்சி

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:47 AM
ராசிபுரத்தில் திமுக இளைஞரணி பொறுப்பாளா்களுக்கான சமூக வலைதள பயிற்சி முகாமில் பேசிய கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 5:57 PM

ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள திமுக இளைஞரணி பொறுப்பாளா்களுக்கு சமூக வலைதள பயிற்சி முகாம் ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், திராவிட இயக்க எழுத்தாளா் மதிமாறன், திமுக இளைஞா் அணி சமூக வலைதள பயிற்சியாளா் இளமாறன் ஆகியோா் கலந்துகொண்டு திமுக இளைஞா் அணியினருக்கு பல்வேறு வலைதள பயன்பாட்டு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கினா்.

முகாமில், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா், ஒன்றியச் செயலா் கே.பி.ஜெகந்நாதன், ஒன்றியக்குழு உறுப்பினா் கே.பாலசந்திரன், மாவட்ட இளைஞரணி செயலா் விஸ்வநாத் உள்ளிட்ட ஒன்றிய, நகர, இளைஞரணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Advertisement