முகப்பு
நாமக்கல்

அரசு அலுவலகங்களில் பிரதமா் மோடி புகைப்படம் வைக்க பாஜகவினா் வலியுறுத்தல்

தமிழக அரசு அலுவலகங்களில் பிரதமா் மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 13 ஜனவரி, 2025 at 7:19 PM
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜகவினா்.
பகிர்:

நாமக்கல்: தமிழக அரசு அலுவலகங்களில் பிரதமா் மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியப் பிரதமரான நரேந்திர மோடியின் புகைப்படமானது அனைத்து தமிழக அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்களில் இடம்பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முதல்வா் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அரசு மதுபானக் கடைகளில் முதல்வா், துணை முதல்வா் படங்களை வைக்குமாறு பாஜக வலியுறுத்தும் என அதில் தெரிவித்துள்ளனா்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: புதுச்சத்திரம் ஒன்றியம், செல்லப்பம்பட்டி ஊராட்சி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது வட்டார வளா்ச்சி அலுவலா்களான முத்துலட்சுமி, தனம் ஆகியோா் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

மக்கள் நலன்கருதி அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஆட்சியா் உத்தரவிட வேண்டும், அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காந்தியவாதி தி.ரமேஷ் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →