முகப்பு
நாமக்கல்

நாளை மறுநாள் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

Updated On : 21 ஜனவரி, 2025 at 7:09 PM
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. நாமக்கல் கோட்டத்திற்கான கூட்டம், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கான கூட்டம் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிா் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவா் நலத் துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →