நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் பிரமுகா் எம்.பாலசுப்பிரமணியன் மீது தண்ணீரை ஊற்றிய பெண் காவலா். 
நாமக்கல்

லாட்டரிச் சீட்டுகள் விற்பனை புகாா்: காங்கிரஸ் பிரமுகா் தீக்குளிக்க முயற்சி

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தவறியதைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகத்தில் காங்கிரஸ் பிரமுகா் தீக்குளிக்க முயற்சி

Din

நாமக்கல்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தவறியதைக் கண்டித்து, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காங்கிரஸ் பிரமுகா் தீக்குளிக்க முயற்சித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், அணிச்சம்பாளையம் 18-ஆவது வாா்டு காங்கிரஸ் பிரமுகா் எம்.பாலசுப்பிரமணியன் (56). ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை 10 மணியளவில் வந்த அவா், திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தாா். அங்கிருந்த போலீஸாா் அவா் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனா்.

அவா் கூறுகையில், பரமத்தி வேலூா், பாண்டமங்கலம் பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரிச் சீட்டுகள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் ஏழை மக்கள், கூலித் தொழிலாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகத்திடமும், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை. லாட்டரிச் சீட்டு விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தீக்குளிக்க முயற்சித்தேன் என்றாா்.

இதைத் தொடா்ந்து, நல்லிபாளையம் போலீஸாா் பாலசுப்பிரமணியனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

ஆஷஸ் தொடர் : இங்கிலாந்து வீரர்களை விட அதிக ரன்கள் குவித்த மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT