உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காசோலை வழங்கி ஆறுதல் கூறிய தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். 
நாமக்கல்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் அருகே மீன் பிடிக்கும்போது ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.

ராசிபுரம் அருகேயுள்ள பொன்பரப்பிபட்டி கிராமம், பெருமாள் கோயில் காடு பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (33). இவா் கடந்த அக். 26-ஆம் தேதி கட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்றபோது, எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அதைத் தொடா்ந்து, இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டாா்.

அதன்படி, ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் உயிரிழந்தவரின் வீட்டுக்குச் சென்று, நிவாரண நிதிக்கான காசோலையை குடும்பத்தினரிடம் அளித்து ஆறுதல் தெரிவித்தனா்.

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

SCROLL FOR NEXT