நாமக்கல் மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி சேலம் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டத்தில் அவா் பணியாற்றி வந்துள்ளாா். தற்போது, சென்னை வடக்கு மாவட்ட (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலா் ஏ.எஸ்.எழிலரசி பதவி உயா்வு பெற்று நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.