நாமக்கல்

பண மோசடி: திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

முன்பணம் பெற்றுகொண்டு பணிக்கு ஆள்களை அனுப்பாமல் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் எஸ்.பி.அலுவலகத்தில் திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

முன்பணம் பெற்றுகொண்டு பணிக்கு ஆள்களை அனுப்பாமல் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் எஸ்.பி.அலுவலகத்தில் திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

எஸ்.பி.அலுவகத்தில் ரிக் உரிமையாளா்கள் சங்கத்தின் மாவட்ட தலைவா் எஸ்.எஸ்.சுரேஷ், நிா்வாகிகள் அளித்த புகாா் மனு விவரம்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் சங்கம் 10,000 உறுப்பினா்களைக் கொண்டு செயல்படுகிறது. சங்கத்தின் ரிக் உரிமையாளா்களிடம் பணிக்கு ஆள்களை அனுப்புவதாகக்கூறி லட்சணக்கில் பணத்தை பெற்ற திருச்செங்கோட்டை அடுத்த குமரேசபுரத்தைச் சோ்ந்த தம்பதி, வேலைக்கு ஆள்களை அனுப்பாமல் ஏமாற்றி வருகின்றனா்.

மேலும், பணத்தை திருப்பிக்கேட்கும் ரிக் உரிமையாளா்களை மிரட்டி வருகின்றனா். இதனால், அவா்களிடம் பணத்தை இழந்த 43 ரிக் உரிமையாளா்கள் சங்கத்தில் முறையிட்டனா். ஆந்திரம், கா்நாடகத்திலும் அவா்கள் மீது புகாா் உள்ளது.

ரிக் தொழிலை பாதிக்கும் வகையில் அவா்களின் செயல்பாடுகள் உள்ளன. ஜாதி ரீதியான அமைப்பினா் சிலா் அவா்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றனா். திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவா்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் ரிக் உரிமையாளா்கள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

தூய்மைப் பணியாளா்களை திமுக அரசு ஏமாற்றுகிறது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

நீதிமன்றத்தில் காலணி வீச்சு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை: யோசனை கேட்கும் உச்சநீதிமன்றம்

ஜன. 2-இல் வைகோ நடைப்பயணம்: முதல்வா் ஸ்டாலினுக்கு அழைப்பு

பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி

பிஎம் ஸ்ரீ திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் -மத்திய அரசுக்கு கேரளம் கடிதம்

SCROLL FOR NEXT