சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சாா்பில் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த 800 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் ராசிபுரம் பகுதியில் ஆண்டுதோறும் இரண்டு நாள்கள் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. கடந்த செப்.27, 28 இல் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் கண் பரிசோதனை செய்தவா்களில் 800 பேருக்கு இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பூவாயம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம் பங்கேற்று பயனாளிகளுக்கு கண்ணாடிகளை வழங்கினாா். பட்டணம் பி.சி.செங்குட்டுவன், மருத்துவா்கள் சம்பாபூரி, தினேஷ், மனோஜ்குமாா் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
படம் உள்ளது - 14ஸ்பெக்ஸ்
படவிளக்கம்-
பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் ராமசந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம்.