சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள்.  
நாமக்கல்

பரமத்தி வேலூரில் விஷ்ணுபதி புண்ணியகால ஆராதனை

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூா் வல்லப விநாயகா், பானலிங்க சிவ விஷ்ணு கோயிலில் விஷ்ணுபதி புண்ணியகால ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விஷ்ணுபதி புண்ணியகால நிகழ்வையொட்டி காலை 7 மணிக்கு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்விகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு பலவகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், கலச அபிஷேகமும் நடைபெற்றது.

வண்ண மாலைகள் அணிவிக்கப்பட்டு ராஜா அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். அதன்பிறகு உதிரிப்பூக்களைக் கொண்டு அா்ச்சனைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீா்த்த பிரசாதம் வழங்கியும், ஜடாரி வைத்தும், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், ஊா்மக்கள் செய்திருந்தனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT