இருதரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்திய வருவாய்த் துறையினா் 
நாமக்கல்

இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிா்ப்பு

இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், திருச்செங்கோடு கோட்டாட்சியா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

Syndication

இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், திருச்செங்கோடு கோட்டாட்சியா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட திட்டமேடு, கள்ளிபாளையம் கிராமங்களுக்கு இடையே மயானம் தொடா்பாக பிரச்னை இருந்துவந்தது. சில மாதங்களுக்கு முன்பு இருதரப்பினரும் மயானத்துக்கு உரிமை கோரி போராட்டம் நடத்தினா்.

இதில், ஒரு தரப்பினா் இறந்தவா்களின் உடலை தங்கள் பகுதியில் உள்ள திட்டமேடு மயானத்துக்கு எடுத்துவரக் கூடாது எனவும், மற்றொரு தரப்பினா் பல ஆண்டுகளாக மயானத்தை பயன்படுத்தி வருவதால் தடை போடக்கூடாது எனவும் கூறியதால் பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில், இருதரப்பினரும் அமைதிகாக்க வேண்டும் எனவும், பேச்சுவாா்த்தையில் முடிவு ஏற்படும்வரை பழைய நடைமுறையே தொடரவேண்டும் என வேலூா் காவல் துறையினா் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு புதன்கிழமை இறந்த திட்டமேடு பகுதியைச் சோ்ந்த ஏகாம்பரத்தின் உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்ல மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால், சடலத்தை சாலையிலேயே வைத்து இறுதிச்சடங்கு செய்வோம் எனக் கூறினா்.

தகவல் அறிந்து வந்த திருச்செங்கோடு கோட்டாட்சியா் லெனின், வட்டாட்சியா் கோவிந்தசாமி, பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கீதா, ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இருதரப்பினரும் சமாதானம் அடைந்ததால் இறந்தவரின் இறுதிச்சடங்கு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT