பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 23 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 11,250 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 61.61, குறைந்தபட்சமாக ரூ. 48.90, சராசரியாக ரூ. 57.57-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6.47 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
இந்தவாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 9, 380 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 65.69, குறைந்தபட்சமாக ரூ. 43.39, சராசரியாக ரூ. 55.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5.23 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.