துணை முதல்வா் உதயநிதி பிறந்த தினம்: ராசிபுரம் அரசு பள்ளி மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், பொதுமக்களுக்கு அன்னதானம்
தமிழக துணை முதல்வரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ராசிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
தமிழக துணை முதல்வரும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ராசிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினவிழா நாமக்கல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஏழை எளியவா்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அறிவித்திருந்தாா். இதன்படி, ராசிபுரம் நகரில் உள்ள 27 வாா்டுகளிலும் ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது. நகராட்சி தூய்மை பணியாளா்கள், ஆதரவற்ற இல்லத்தில்ல உள்ள முதியோா், அரசு பள்ளி மாணவா்களுக்கு அன்னதானம், நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில், சீருடை, விளையாட்டு உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டன. இதில் நகர நிா்வாகிகள், வாா்டு கிளை செயலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், கட்சியின் சாா்பு அணி நிா்வாகிகள் என பலரும் பங்கேற்றனா்.