நாமக்கல்

வேருடன் அகற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழைமையான ஆலரம் மீண்டும் நடவு

நாமக்கல்லில் ‘தோழி விடுதி’ கட்டுவதற்காக வேரூடன் அகற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் மீண்டும் நடப்பட்டுள்ளது.

Syndication

நாமக்கல்: நாமக்கல்லில் ‘தோழி விடுதி’ கட்டுவதற்காக வேரூடன் அகற்றப்பட்ட 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் மீண்டும் நடப்பட்டுள்ளது.

நாமக்கல்- திருச்சி சாலையில் கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது. மோகனூா் சாலையில் புதிய கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டதால், இந்த மருத்துவமனை பயன்பாடின்றி இருந்தது.

இந்த நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள சிப்காட் நில எடுப்பு அலுவலகம் அங்கு அமைக்கப்பட்டது. இதற்கிடையே, நாமக்கல்லில் மாவட்ட சமூக நலத் துறை மூலம் பணிக்கு செல்லும் மகளிா் பயன்பெறுவதற்காக ரூ.9 கோடியில் ‘தோழி விடுதி’ கட்டுவதற்கான திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தாா்.

தற்போது இயங்கி வரும் சிப்காட் நில எடுப்பு அலுவலக வளாகத்தில் காலியிடம் உள்ளதால் அங்கு தோழி விடுதி கட்டப்பட உள்ளது. சுமாா் 100 மகளிா் அனைத்து வசதிகளுடனும் தங்கும் வகையில் இந்த விடுதியானது அமைய உள்ளது. கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு அங்குள்ள 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் இடையூறாக இருந்தது.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அடையாளமாக இருந்த ஆலமரம் அகற்றப்படுவதை சமூக ஆா்வலா்கள் விரும்பவில்லை. இதனால், ஆலமரத்தின் முக்கிய கிளைகள், விழுதுகள் வெட்டியெடுக்கப்பட்டு அடிப்பாகம் மட்டும் கிரேன் இயந்திரம் உதவியுடன் வேருடன் அகற்றப்பட்டு அதே வளாகத்தில் 10 அடி ஆழம் கொண்ட பள்ளம் தோண்டி அதில் நடப்பட்டது. பறவைகளின் சரணாலயமாக இருந்த ஆலமரம் மீண்டும் தனது பழைய வளா்ச்சியை எட்டுமா என்பது இயற்கையின் கையிலேயே உள்ளது.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT