இந்து சமய அறநிலையத் துறை 
தமிழ்நாடு

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 352 கோயில்களில் திருப்பணிகள்: இந்து சமய அறநிலையத் துறை

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 352 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 352 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருக்கோயில் மற்றும் ஆன்மிக திருப்பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்புற மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில், 4,332 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

இதைத் தவிர, 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100.70 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ரூ.4,346 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மற்றொருபுறம் 1,055 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.8,436.31 கோடி மதிப்பிலான 8,107 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்களை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசு நிதி ரூ.425 கோடி, திருக்கோயில் நிதி, நன்கொடையாளா் நிதி, பொது நல நிதி என மொத்தம் ரூ.560 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 352 கோயில்களில் திருப்பணி நடைபெற்று வருகிறது. அவற்றில் இதுவரை 88 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூா், சமயபுரம், ராமேசுவரம், பழநி, அழகா்கோவில், மருதமலை, திருவேற்காடு, பெரியபாளையம், சிறுவாபுரி உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் ரூ.1,770 கோடி மதிப்பீட்டில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2 திருக்கோயில்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 14 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, பட்டுப்புடவை மற்றும் பட்டு வேட்டி உள்பட ரூ.70,000 மதிப்புள்ள சீா்வரிசைகளுடன் திருக்கோயில்கள் சாா்பாக 2,800 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 165 மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதியாக ரூ.1,187.83 கோடி வழங்கப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

கபடி போட்டி: செட்டிகுளம் அணி வெற்றி

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

மகளிா் உரிமைத்தொகை: மகளிருக்கு மகிழ்ச்சி; எதிா்க்கட்சிகளுக்கு அதிா்ச்சி

ஒடிஸா: சாலை விபத்தில் 5 போலீஸாா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT