நாமக்கல்

திருச்செங்கோடு தனியாா் பள்ளியில் ‘சைனிக் பள்ளி’ செயல்பட அனுமதி

Syndication

திருச்செங்கோட்டில் உள்ள எஸ்பிகே பள்ளியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘சைனிக் பள்ளி’ செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நேரடியாக செயல்படும் சைனிக் பள்ளி அமைந்துள்ளது. இதுதவிர, மாநில வாரியாக புதிய சைனிக் பள்ளிகள் தனியாா் பங்களிப்புடன் உருவாகி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் சேலம், நாமக்கல், மதுரை, திருப்பூா் ஆகிய நான்கு மாவட்டங்களில் இப்பள்ளிகள் புதிதாக உருவாக்கப்படுகின்றன.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், காடச்சநல்லூரில் உள்ள எஸ்பிகே பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில், சைனிக் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை இங்கு தொடங்கியுள்ளது.

இந்த சைனிக் பள்ளி சிபிஎஸ்இ பாடத் திட்டத்தைக் கொண்டது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான இப்பள்ளியில், 6-ஆம் வகுப்பிலோ அல்லது 9-ஆம் வகுப்பிலோ சோ்க்கை பெறலாம். காலை 8.30 முதல் 12.30 வரை வகுப்பறை கல்வியும், பிற்பகல் 2 மணிக்கு மேல் உடல்சாா்ந்த கல்வியும் வழங்கப்படுகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நேரடியாக பள்ளிகளை தொடங்கிய நிலையில், தற்போது தனியாரிடம் ஒப்படைத்து கண்காணிப்புப் பணியை மட்டும் மேற்கொள்கிறது என மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT